வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

Spread the love

வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது


தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது

தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது


எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை

வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை

அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,

தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது

வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்

மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,

வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply