லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு


லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதியை சேர்ந்த ஆதிவாசி தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்துள்ளது.

கேரள லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு


லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி பரிசு பெற்ற தொழிலாளி ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர்.
திருவனந்தபுரம்:

கேரளா அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை,

புத்தாண்டு மற்றும் ஓணப்பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல் நடைபெறும்.

அதன்படி சமீபத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது.

இதில் கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதியில் உள்ள ஆதிவாசி காலனியை சேர்ந்த ராஜன் என்ற தொழிலாளிக்கு முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்தது.

இந்த லாட்டரி சீட்டை ராஜன், வயநாட்டில் உள்ள ஒரு லாட்டரி வியாபாரியிடம் வாங்கி இருந்தார்.

முதல் பரிசான ரூ.12 கோடி பெற்ற ஆதிவாசி தொழிலாளி ராஜன், அதிர்ஷ்ட சீட்டை அருகில் உள்ள வங்கியில்

டெபாசிட் செய்தார். பரிசு கிடைத்தது பற்றி ராஜன் கூறியதாவது:-

நான் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவதில்லை. எப்போதாவது பணம் இருந்தால் லாட்டரி சீட்டு எடுப்பேன்.

அப்படிதான் இந்த சீட்டையும் வாங்கி இருந்தேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்கால செலவுக்கு இந்த பணத்தை செலவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு