லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

Spread the love

லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

லண்டனில் உள்ள தமிழர் கடைகளில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் வியாபாரம் பெரும் சூடு பிடித்தது ,அதனால் வரும்

மக்களுக்கு வரையறுக்க பட்ட லிமிட் பொருட்கள் வழங்க பட்டன .
பொருட்களின் விலைகளும் அதிகமாக உயர்த்த பட்டு விற்க பட்டன

வழமையாக செல்லும் வாடிக்கை யாளர்களுக்கே அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த நிலையால் மீளவும் அந்த

கடைகளுக்கு தாம் செல்ல மாட்டோம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தன .

தற்பொழுது சில கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அந்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளனவாம்

இதனால் கலக்கம் உற்ற தமிழர்கள் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சி வருகின்றனர் ,அங்கு பணி புரியும் தமிழர்களை வற்புறுத்தி

வேலைகளுக்கு வருமாறு அதே தமிழ் முதலாளி மார்கள் கோருவதாகவும் ,

ஆனால் நோயின் பீதி காரணமாக அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என கூறும் நிலையில் ,வரா விட்டால் வேலை இல்லை என

தெரிவிப்பதால் அந்த பணியாளர்கள் பெரும் சங்கட நிலையில் சிக்கியுள்ளன

எனினும் வேலை போனாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என கருதிய பல கூலிகள் அந்த கடைக்கு பணிக்கு செல்வதை
முற்றாக கைவிட்டு வீட்டில் முடங்கியுள்ளது .

அண்மையில் பிரிட்டனில் கொரனோவால் இறந்த தமிழர்கள் சிலர் ,கடையில் பணி புரிந்தவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

நோயின் தொற்றுடன்,நோயினை மறைத்து , இவர்கள் வேலை செய்ய கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழர்கள்

இப்பொழுது தமிழர் கடைகளுக்குச செல்வதை அதிகம் தவிர்த்து வருகின்றனர்

தமது கடைகள் பூட்ட பட்ட பொழுதும் அதற்கான காரணத்தை இவர்கள் மறைத்து வருவதால் அங்கு உள்ளே பணி

புரிந்தவர்களினாலே கதைகள் வேகமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்

மனைவி பிள்ளைகள் கடைகளுக்கு செல்லாதீர்கள் என மறித்த பொழுதும் அது தாண்டி பணிக்கு சென்ற சிலர், நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதும் ,இறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது

இப்பொழுது ஆள் இல்லா கடையில் இலையான் கலைக்கும் நம்ம சில தமிழ் கடைகள் ,


உண்மையும் ,நேர்மையும் இல்லாது வியாபாரம் செய்திட முனைந்தால் இது தான் நிலவரம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் வறுத்தெடுத்து வருவதை காண முடிகிறது

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாது போல ,அலறிய மக்கள் மடியில் அதிக பணத்தை கறந்தன இந்த தமிழ் கடைகள் .

கொரனோ முடிவுற்றதும் ,விலை கூடி விற்ற தமிழர் கடைகளுக்கு வியாபாரம் கொரோனவாக முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக உள்ளன

சில கடைகளின் முன்பாக மூன்றடி இடைவெளியில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது அதற்கான கோடுகள் கடைகளில்

இடப் பட்டுள்ளன, இல்லை எனின் அவ்வாறான தூரத்தில் நிற்க வேண்டும்

ஆனால் தமிழர் கடைகள் சிலதில் அவை காண முடியாத நிலையிலும் ,கவுண்டரில் இருந்து பணத்தை பெறுபவர் தூரமும்

அவ்வாறே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக பேசு பொருளாகிறது,

அவ்விதம் இல்லாத கடைகளுக்கு மூடு விழா இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் வைராலகி வருகின்றன

அனைவரும் தமிழர்கள் எனவே இந்த கொடிய நோயின் காலத்தில் ,சிந்தித்து செயல் படுவது நன்று ,

பணம் நாளையும் உழைக்கலாம் ,ஆனால் உயிர் போனால் வருமா ..? இந்த நோய் தொற்றின் நிலை என்ன .? உங்களுக்குள் இந்த

கேள்விகளை எழுப்பி பார்ப்பின் அதன் எதிர்விளைவுகள் சற்றேனும் தெழிந்திட வாய்ப்புக்கள் இருக்கும் என நம்பலாம் .

இந்த நோயின் பரவல் காலத்தில் நான்கு வாரத்தில் நத்தார் வியாபாரத்தை தாண்டி வியாபாரம் புரிந்து பிரிட்டனில் புரிந்து டெஸ்க்கோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது

எங்கே நம்ம தமிழர் கடைகளில் உங்கள் வியாபார கணக்கு எது என்பதை காண்பிக்க முடியுமா ….? இது மக்கள் மன்றின் கேள்வி ….

இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் ஏதும் இல்லை என்பதே ,பதிலாக அமையும் . நேர்மை எங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் எப்பொழுதும் வியாபாரம் பெருகும் என்பதே வியாபார தந்திரம் .

லண்டனில் தமிழர் கடைகளுக்கு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு

Author: நலன் விரும்பி

Leave a Reply