ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

Spread the love

ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதலுக்கு எதிராக உக்கிரேனும் தாக்குதல் நடத்தி வருகிறது இந்த தாக்குதலில் ரசியா இராணுவத்தின் 1390 முதல் தர தாக்குதல் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன

முன்னேறி வரும் ரசிய இராணுவதின் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,ஆனாலும் மேற்குலக நாடுகள் வழங்கி வரும் போராயுதங்கள் துணையுடன் தொடர்நது போராடி வருகிறது

பிரிட்டன் அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்கள் மூலம் தனது தலை நகரை உக்கிரேனது இராணுவம் தக்க வைத்துள்ளது

நூற்றி மூன்று நாட்கள் கடந்து நடைபெறும் உக்கிர சமரில் ரசியா படைகளில் 31 600 பேர் பலியாகியும் ,இருபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்

பல நூறு முக்கிய ஆயுத தளபாடங்கள் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது

இன்று வரை தொடர்ந்து வரும் ரஷியா இராணுவத்தினரது மோதல்களில் உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,முக்கிய பகுதிகள் சூடு காடாக காட்சி அளிக்கிறது

ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

ரசியா படை முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக மார் தட்டும் உக்கிரேன் நாடு சந்தித்துள்ள பேரழிவில் இருந்து அந்த நாட்டை மீள கட்டியெழுப்ப பல்லாண்டுகள் செல்லும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது

எதிர் வரும் கோடை காலத்திற்குள் தமது எதிரிகளது நாட்டின் மீதான போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷியா இராணுவம் தெரிவித்து வருகிறது

இவர்களின் இந்த கூற்று மெய்ப்பிக்கும் வகையில் சமீப நாட்களில் ரசியா இராணுவம் பாரிய படையெடுப்பை மேற் கொள்வதுடன் அதிக எறிகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

ரசியா, டாங்கிகள், அழிப்பு,

ரசியாவின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா ,பிரிட்டன் படைகள் நீண்ட தூர பல் குழல் ரொக்கட் ஏவுகணைகளை வழங்கினர்

இதன் ஊடாக மேற்கொள்ள பட்ட தாக்குதலில் ரசியா நாட்டு இராணுவத்தின் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை செய்ய பட்டுளளார் இவரது இளப்பு பேரிழப்பாக பார்க்க படுகிறது

தமது தாய் மண்ணை மீட்க இறு திவரை போராடுவோம் என உக்கிரேன் மக்கள் சபதம் எடுத்து களத்தில் நிற்கின்றனர்
இது வரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டைய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்

ரசியா இராணுவம் அதிகம் முன்னேற்ற நட வடிக்கைக்கு பயன் படுத்த படும் டாங்கிகள் அழிப்பு ,ரசியா இராணுவத்திற்கு பெரும் பின்னடைவு என உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

ரசியா இராணுவ டாங்கிகள் அழித்துள்ள காட்சிகளை உக்கிரேன் இராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது ,தாமே வென்றவர்கள் என உலகில் காட்டி மகிழ்கிறது

இது உக்கிரேனுக்கு கிடைத்துள்ள தற்கால மகிழ்ச்சி என்பது ரசியா நாட்டின் பதிலாக வீழ்ந்துள்ளது , உக்கிரேன் போரில் வெல்ல போவது ரசியாவா உக்கிறேனா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply