ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை

Spread the love

ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை

நடிகை சிம்ரன், தான் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை பதற வைத்த சிம்ரன்
சிம்ரன்
நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத

மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம் என்று பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன், புகழின் உச்சியில்

இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டிய சிம்ரனுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடித்த பேட்ட

படம் வரவேற்பை கொடுத்தது. மீண்டும் பழைய சிம்ரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

சிம்ரன்

இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது

எடுக்கப்பட்டது என்று கூறி நெத்தி, கை, கால்களில் எல்லாம் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை

வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்து விட்டார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே

நடிகை சிம்ரனுக்கு அடிப்பட்டுவிட்டதோ என்று கலங்கி, ஆறுதல் சொல்லி வருகிறார்கள். பின்னர், இது படப்பிடிப்பு

தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்த பிறகு தான் நிம்மதி அடைந்தனர்.

ரசிகர்களை பதற வைத்த
ரசிகர்களை பதற வைத்த

Spread the love