யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு

யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு
Spread the love

யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு

யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு ,மருத்துவர் அர்ச்சுனா யார் குழு நான் என்கின்ற தலைப்பின் கீழ் ஒரு காணொளியை பதிவு செய்துள்ளார் .

அதன் ஊடாக அவர் மூன்று வெளிநாட்டு குழுக்களாக புலிகள் அணிகள் மற்றும் நாம் தமிழர் உள்ளதாக அறிவித்துள்ளார் .

இதில் முக்கிய தலைவர் மகளை முன்னிறுத்திய துவராக ,மற்றும் நாம் தமிழர் குழு ,இரண்டாவது துவராகா இல்லை என்ற குழு ,நாம் தமிழர் கட்சி என்ற குழு என்ற விடயத்தை மருத்துவர் அர்ச்சுனா தெளிவு படுத்தியுள்ளார் .

இதில் ஐயா இதில் தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை நாம் சுட்டி காட்ட விழைகின்றோம் .

புலம் பெயர் தேசத்தில் உள்ள குழுக்களை நாங்கள் இவ்வாறு அழைக்கின்றோம் .

அதில் அனைத்துலக தலைமை செயலகம் ,தலைமை செயலகம் ,நாடு கடந்த அரசாங்கம் ,மற்றும் நாம் தமிழர் கட்சி பாசறை என்பன இயக்கம் பெறுகின்றன .

எனவே நீங்கள் கூறிய குழு என்பதற்குள் நாம் தமிழர் கட்சி உள்ளடக்க முடியாது .

காரணம் அது ஒரு காட்சியாக தேர்தலில் போட்டியிட்டு இயங்குகிறது .அது போன்றே நாடு கடந்த அரசாங்கமும் காணப்படுகிறது ,அப்படி நோக்கின் அவை அரசியல் கட்சி என்ற வடத்திற்குள்; அடக்கி விடலாம் .

அடுத்து அனைத்துலக செயலகம் என்பது ,இது விடுதலை புலிகள் தாயகத்தில் இயக்கம் பெறுகின்ற பொழுது உருவாக்கம் பெற்ற முதலாவது புலிகளின் சர்வதேச கட்டமைமைப்பு ,அதனை வலையமைப்பு என கூறலாம் .

இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் உருவாக்கம் பெற்றதே தலைமைச்செயலகம் மற்றும் நாடு கடந்த அரசாகும் .

எனவே இதனை புரிந்து கொண்டு தரவுகளை செம்மையாக வழங்குங்கள் ,உங்களை பின் தொடரும் இளைய சமுதாயம் தவறான தகவலை பெற்று குழப்பத்தில் ஆழ்ந்து விடுவார்கள் .

தவிர துவராகா குழு என்பதே மேலே கூறப்பட்ட ,அனைத்துலக சார்ந்த குழுவாக காணப்படுகிறது .

அதில் பாவலர் காசி ஆனந்தன் , ,திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் மாவீரர் வியாபரிகள் என பலர் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் .

எனவே இதனை ஐயா மருத்துவர் அர்ச்சுனா தாரவுகளை தெளிவாக தெரிந்து அறிந்து கொண்டு விடையத்தை பகிருங்கள் .

உங்கள் அண்ணா லண்டனில் உள்ள அவர்களை கேட்டாலே இது பல விடயங்கள் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன் .

தாரவுகள் பிழையாகும் பொழுது நீங்கள் சர்ச்ச்சைக்குள் சிக்கி விடக்கூடாது என்பத்திலும் ,உங்களை ஆதரிக்கும் நான் ,மற்றும் நாம், எதிரிகளுக்கு கருத்து அல்லது பதில் கூற முடியாத நெருக்கடியை நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதை இந்த பத்தியின் ஊடாக கேட்டு கொள்கிறேன் .

விடுதலையின் கனவை விரித்து மலரும் நீங்கள் கறைபடிந்து , காணாமல் போய்விட கூடாது என்பதில் உங்களை ஆதரிக்கும் எமக்கும் கரிசனை உள்ளது .

ஆதலால் கொஞ்சம் இதனை கருத்தில் கொள்ளுங்கள் மருத்துவர் அர்ச்சுனா அவர்களே .

நாம் எமது டிக் டாக் live இல் நாள்தோறும் உங்களுக்கு ஆதரவை பேசி வருகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி .எதிரி இணையம்