மோடிக்கு எதிராக அவதூறு: மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரி பதவி இறக்கம்


மோடிக்கு எதிராக அவதூறு: மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரி பதவி இறக்கம்

பிரதமர் மோடி உள்ளிட்டோர் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் தரக்குறைவான பதிவுகளை பதிவு செய்த

பாதுகாப்பு அதிகாரி உருஜுல் ஹசனின் பதவி அந்தஸ்தை 5 ஆண்டுகளுக்கு குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

மோடிக்கு எதிராக அவதூறு: மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரி பதவி இறக்கம் – வெங்கையா நாயுடு


மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவை துணை இயக்குனர் (பாதுகாப்பு) உருஜுல் ஹசன். இவரது சமூக வலைத்தள பக்கத்தில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு

மாநில முதல்-மந்திரிகள் ஆகியோரை இழிவுபடுத்தக்கூடிய, தரக்குறைவான, கிண்டலான பதிவுகள் இடம் பெற்றிருந்தன.

இதுபோன்ற பதிவுகளை அவர் பகிர்ந்து இருந்தார். அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக

நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு முடிவு

செய்தார். அரசியல் நடுநிலையுடன் இருப்பது தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக உருஜுல் ஹசனின் பதவி

அந்தஸ்தை 5 ஆண்டுகளுக்கு குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு பிறகும், அவர் தற்போதைய பதவி அந்தஸ்தை பெற முடியாது.

உருஜுல் ஹசன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்கு அவருக்கு ஊதிய உயர்வு கிடையாது என்றும் மாநிலங்களவை செயலகம் கூறியுள்ளது.