
மிளகு சீரக இடியாப்பம்
சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மிளகு சீரக இடியாப்பம் செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இருமலை குணமாக்கும் மிளகு சீரக இடியாப்பம்
மிளகு சீரக இடியாப்பம்
தேவையான பொருட்கள்
இடியாப்பம் – 6
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு சீரக இடியாப்பம்
செய்முறை
இடியாப்பத்தை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள்,பெருங்காயத்தூள், சிறிது உப்பு போட்டு இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.
சூப்பரான மிளகு சீரக இடியாப்பம் ரெடி.