மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை


மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்றுக்கு பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார்.

மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை
விஜய்


விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி,

மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்டி

ஸ்டோரி பாடல் மட்டும் யூடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இந்த பாடலுக்கு பல பிரபலங்களும் நடனம் ஆடி வீடியோ

வெளியிட்டார்கள். இந்நிலையில், விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து அணியில் நடித்த வினயா சேஷன் வெளிநாட்டில்

நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

விஜய் – வினயா ஷேசன்

இந்த வீடியோவை நடிகை வினயா சேஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.