மாமியார் மீதான கோபத்தில் பெத்த குழந்தையை கொன்று புதைத்த தாய்


மாமியார் மீதான கோபத்தில் பெத்த குழந்தையை கொன்று புதைத்த தாய்

தன் மாமியார் மீதான கோபத்தில், பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையையே கொன்று புதைத்துள்ள சம்பவம்

ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்… மாமியார் மீதான கோபத்தில் பெத்த குழந்தையை கொன்ற…
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை அடுத்துள்ள சிறு

நகரம் பெண்டுர்தி. இந்நகரத்தைச் சேர்ந்த அப்பாராவ், குஷ்மலதா ஆகியோருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

ருமணத்திற்கு பின் பெங்களூரில் வசித்து வந்த அப்பாராவ் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த

ஆறு மாதங்களாக சொந்த ஊரான பெண்டுர்த்திக்கு வந்த அவர்கள் அங்கேயே வசித்து வருகின்றனர்.

பெற்ற குழந்தையையே கொன்ற ‘பாசக்கார’ தாய்

இந்தநிலையில், கடந்த ஆறாம் தேதி குஷ்மலதாவிற்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே பிரச்சனை

ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குஷ்மலதா தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இப்படியொரு அதிர்ச்சியா?- பாவம் குழந்தை; கொடூர மனம் படைத்த பெற்றோர் செய்த காரியம்!

அவருடைய வீட்டின் பின்புறம் இருக்கும் மலைமீது ஏறி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டார். இந்த

நிலையில் அடுத்த நாளான ஏழாம் தேதி அப்பாரவ் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த மலைப்பகுதியில் தாய், மகள் இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

உள்ளூர் மக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் குஷ்மலதா கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை காட்டுப் பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் குஷ்மலதாவை பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

கழுத்து, கை ஆகியவற்றில் வெட்டுக்காயங்களுடன் குழந்தையில்லாமல் வீடு திரும்பிய அவர், “காட்டுப் பகுதியில் தண்ணீர் கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட

தீவிர தாகத்தின் காரணமாக குழந்தை இறந்துவிட்டது. நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கழுத்து

. கை ஆகிய உடல் பகுதிகளில் கூறிய கற்களால் வெட்டிக் கொண்டேன். ஆனால் உயிர் போகவில்லை” என கூறியுள்ளார்.

குஷ்மலதா வீடு திரும்பிய தகவலறிந்த போலீஸார், அவரை உடன் அழைத்து சென்று மோப்ப நாய்கள் உதவியுடன் குழந்தையை புதைத்த இடத்தை தேடி கண்டுபிடிக்கும்

முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர் குறிப்பிட்ட பகுதியில் குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

குழந்தையின் உடலை தோண்டி எடுத்த போலீசார், இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து, மரணமடைந்த

குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.video

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறுகின்றனர்.

மாமியார் மீதான கோபத்தில்