மனைவியுடன் நடைப்பயிற்சி செய்த பிரபல நடிகர்
பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் 75 நாட்களுக்குப் பிறகு மனைவியுடன் நடைப்பயிற்சி செய்துள்ளார்.
75 நாட்களுக்குப் பிறகு மனைவியுடன் நடைப்பயிற்சி செய்த பிரபல நடிகர்
மனைவியுடன் மிலிந்த் சோமன்
கொரோனா வைரஸ் மனிதர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. பலரும் அவர்களது அன்றாட வாழ்க்கையை மறந்து
வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது சில இடங்களில் கட்டுப்பாடுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் பையா போன்ற படங்களில் நடித்த வில்லன் நடிகர் மிலிந்த் சோமன், அவரது மனைவியுடன் 75
நாட்களுக்கு பிறகு முதல்முறையாக ஐந்து கிலோமீட்டர் நடை பயிற்சி செய்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டார்.
மனைவியுடன் மிலிந்த் சோமன்
அவர் கூறும்போது “ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு இது முதல் ஓட்டம். 75 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக ஓடுவதால் இந்த
முறை நடந்து தான் சென்றோம். ஏனென்றால் மனித உடலால் இவ்வளவு பெரிய மாற்றத்தை சந்திக்க முடியாது. அருமையான
சுற்றுச்சூழல் ரசித்துகொண்டு ஐந்து கிலோமீட்டர் நானும் எனது மனைவியும் நடைப்பயணம் மேற்கொண்டோம். இப்போது நலமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
