பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா


பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது அடையாளங்களில்

ஒன்றான கண் கண்ணாடியை ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா ஏலம் விட்டுள்ளார்.

தனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா
மியா காலிஃபா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த

அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே

காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.

லெபனானை பூர்வீகமாக கொண்ட ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா, வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி

திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார்.

தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.