
பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
பிரியாணி தோற்று போகும் அளவில் ,குஸ்கா முட்டை வறுவல் செய்து சாப்பிடுங்க .
மிக இலகுவான முறையில் ,அதிக சுவையுடன் கூடிய முட்டை குஸ்கா வறுவல்
செய்வது எப்படி..?உங்களின் இந்த கேள்விக்கு இதோ பதில் உள்ளது .
வாங்கோ இப்போ முட்டை குஸ்கா வறுவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
முட்டை குஸ்கா செய்முறை ஒன்று
முதல்ல தக்காளி சாதம் செய்வதற்கு அரசி ஊற வைத்துக் கொள்ளுங்க .
மூன்று தடவை தண்ணியில அரிசியை நன்றாக கழுவி எடுத்திருங்க .
அப்புறம் புதிய தண்ணியில இந்த அரிசியை முப்பது நிமிடம் ஊற வைத்திடுங்க .
அரை மணி நேரம் கழித்து குக்கர் எடுத்து அதனை சூடாக்கி கொள்ளுங்க ,அந்த குக்கரில் ,ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்திடுங்க .இது கூட இரண்டு ஏலக்காய் ,மூன்று கராம்பு ,இரண்டு பட்டை ,ஒரு பிரிஞ்சி இலை ,இது கூட வெட்டிய வெங்காயத்தை நீள வாக்கில் பொடியாக வெட்டி சேர்த்திடுங்க .
இவை யாவற்றையும் இப்போ ஒன்றாக சேர்த்து வதக்கிடுங்க .வெங்காயத்தின் கலர் மாறி வரும் வரைக்கும் நன்றாக வதாக்கி வாங்க .
வெங்காயம் வதக்கி வந்ததன் பின்னர் ,ஒரு பச்சை மிளகாய் ,மற்றும் தக்காளி ஒன்று பொடியாக வெட்டி சேர்த்து ,உப்பு ,மஞ்சள் ,இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக கலக்கி வதக்கிடுங்க .
இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் ஒரு கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,
ஒரு கரண்டி மல்லி தூள் ,கூடவே காரத்திற்கு கூடவே மிளகாய் தூள் சேர்த்து வதக்கி வாங்க .
மசாலா பச்சை வாசம் போன பின்னர் ,ஒரு கைபிடி கொத்தமல்லி இலை ,புதினா இலை ,சேர்த்து வதக்கி வாங்க .நன்றாக வதங்கிய பின்னர் ,ஒரு கரண்டி தயிர் சேர்த்திடுங்க .சேர்த்துட்டு நன்றாக வதக்கி வாங்க .
இப்போ தேவையான அளவு தண்ணீர் ஊற்றிடுங்க ,தண்ணி கொதித்து வந்த பின்னர் ,தேவையான உப்பு சேர்த்து கொள்ளுங்க ,அப்புறம் கலக்கிய பின்னர் ,இப்போ பசுமதி அரிசியை வடி கட்டி இதில போட்டு கொள்ளுங்க .
அரசி ஓரளவு வெந்த பின்னர், மூடிய போட்டு மூடி கொள்ளுங்க .இப்போ குஸ்கா சூப்பராக தயாராகிடிச்சு .
பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
முட்டை மிளகு வறுவல் செய்முறை இரண்டு
அடுப்பில கடாயா வைத்து அதில இரண்டு கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .
எண்ணெய் சூடானதும் ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கரண்டி மிளகு தூள் ,தேவையான அளவு உப்பு ,போட்டு எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி வதக்கிடுங்க .
அவித்து வைத்த முட்டையை இரண்டாக வெட்டி இதில சேர்த்திடுங்க .
இப்போ இந்த முட்டையை இரு பக்கம் திருப்பி நன்றாக வறுத்திடுங்க .
இப்போ முட்டையை எடுத்து தட்டு ஒன்றில் வைத்திடுங்க ,இப்போ அதே கடாயில பொடியாக வெட்டிய வெங்காயம் ,கருவேப்பிலை ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நனறாக வதக்கி வாங்க .
இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் மல்லி தூள் ,மிளகு தூள் ,உப்பு .
அரை கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நனறாக வதக்கி வாங்க .
மசாலா பச்சை வாசம் போன பின்னர் ஒரு தக்காளியை அரைத்து நன்றாக மிக்ஸ் பண்னி வதக்கி வாங்க .தக்காளி பச்சை வாசம் போன பின்னர் ,அது தொக்கு மாதிரி வந்த பின்னர் ,இதில எடுத்து வைத்த முட்டைகளை சேர்த்திடுங்க .
முட்டையுடன் மசாலா கலக்கி அப்படியே ,அடுப்பில ஒரு நிமிடம் வைத்து ,மிளகாய் தூள் தூவி அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .இப்போ எல்லாம் ரெடியாகிடுச்சு .
தயிர் சாதம் ,சாம்பாரு சாதம் ,குஸ்காவுடன் , இந்த முட்டை மிளகு வறுவல், சேர்த்து சாப்பிட்டா செமையாக இருக்கும் .
சமையல் என்பது ஒரு கலைங்க .அதனை ரசித்து சமைத்தால் ருசித்து சாப்பிடலாம் தலைவா .
அப்புறம் என்ன குஷி தாங்க . ரெம்ப நல்ல ஒரு புடி புடிங்க .
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY
- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL
- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL
- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil
- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்
- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை
- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry
- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE
- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL
- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE