பிரதமர் மோடி அறிவித்த நாடு தழுவிய 21 நாட்கள் ஊரடங்கு தொடங்கியது,


பிரதமர் மோடி அறிவித்த நாடு தழுவிய 21 நாட்கள் ஊரடங்கு தொடங்கியது

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸ்

தாக்குதலுக்கு 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த உத்தரவின் மூலம் அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோப்பு படம்

இந்நிலையில், பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு தற்போது நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:-

*உணவு பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம்.
*அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*பெட்ரோல்ல் பங்க்குகள், கேஸ் ஏஜென்சிகள் செயல்படும்.
*ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.

*வங்கிகள், எடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும்.
*கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்.

*அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும்.
*விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

*பிப்ரவரி 15-க்கு பின் இந்தியா திரும்பியவர்கள் சுகாதாரத்துறையின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

*சுகாதாரத்துறையின் அறிவுரைகளை மீறியவர்கள் மீது சட்டம்ப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் மோடி அறிவித்த
பிரதமர் மோடி அறிவித்த