பியர் குடிப்பதை குறைத்து- கோப்பிக்கு அடிமையான கொலண்ட் நாட்டு மக்கள்


பியர் குடிப்பதை குறைத்து- கோப்பிக்கு அடிமையான கொலண்ட் நாட்டு மக்கள்

ஐரோப்பிய நாட்டில் நெதர்லாந்து நாட்டினர் இலங்கையை ஆண்டவர்கள் ,இவர்களை டச்சு காரர் என்பார்கள் .

இந்த நாட்டுக்கு மூன்று பெயர்கள் உள்ளன ,ஐரோப்பாவில் வந்து கொலண்ட் எங்கே என்று கேடடால் யாரும் தெரியாது

என்பார்கள் ,நெதர்லாந்து அல்லது டச்சு என்றால் மட்டுமே நாட்டை சொல்வார்கள் இது இலங்கை மக்கள் பலருக்கு தெரியாத புதிர் .

அவர்கள் பேசுவது டச்சு மொழி ,எனவே டச்சு நாடு என்றே அழைக்கின்றனர் .


விடயம் என்னவென்றால் இதே நெதர்லாந்து நாட்டவர்கள் மது குடிப்பதை குறைத்து கோப்பிக்கு அதிகம் செலவு செய்கின்றனராம் .

பியர் குடிப்பதை குறைத்து- கோப்பிக்கு அடிமையான கொலண்ட் நாட்டு மக்கள்

பியர்,மற்றும் மது இங்கே மலிவு விற்பனையில் உள்ளது ,ஆனால் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 620 மில்லியன்

யூரோக்கள் கோப்பிக்கு செலவு செய்ய பட்டுள்ளதாம் .ஒரு கோப்பியின் விலை கடந்த இரண்டு வருடத்தில் சுமார் 2.20 euros to 2.46 ஆக உள்ளது .

ஆனால் ஒரு பியர் ஒரு யூரோவில் இருந்து விற்பனை செய்ய படுகிறது ,வெள்ளையர்கள் என்றாலே அதிகம் குடிக்கு

அடிமையானவர்கள் என பொருள் ,ஆனால் இலங்கையை ஆண்டதால் என்னவோ கோப்பிக்கு
இவர்கள் அடிமையாகி விட்டனர் .

பாருங்கள் குடி மகன்கள் பெரும் குடியை தவிர்த்து தம்மை தற்காத்துள்ளனர், குளிருக்கு அதிகம் கோப்பி குடிப்பதற்கு மாறி விட்டனர் ,

ஆனால் வந்தேறிகளாக உள்ள நம்ம தமிழர் இங்கு வந்து மதுவுக்கு அடிமையாகி அலைவதை காண்கிறோம் .மேற்குலக நாடும் அதன் வளர்ச்சி ,ஜனநாயகம்

,பொருளாதார மேம்பாடுகளை நம்ம தமிழர்கள் உன்னிப்பாக அறிந்து முன்னேறிவிட தவறுகின்றனர் .

இந்த நாடுகள் எவ்வாறு வளர்ச்சி உற்றன என்ற ஒற்றை சொல்லுக்குள் உள்ள உள்ளடக்கத்தை அறிய மறந்து

பியர் குடிப்பதை குறைத்து- கோப்பிக்கு அடிமையான கொலண்ட் நாட்டு மக்கள்

போயினர் , தன்னில் தான் தங்கி வாழும் வாழ்வியல் நெறிமுறையை இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்தியுள்ளது .

விளங்க கூறின் அவர் அவர் உழைத்து அவர் அவர் வேலையை பார்ப்பது ,அம்மா,அவருக்கு தான் உழைக்க

வேண்டும் பிள்ளைகள் அவருக்கு தாமே உழைக்க வேண்டும் பெற்றவர்கள் செலவு செய்ய மாட்டார்கள் .

ஒன்றாக கடைக்கு செல்வார்கள் , ஆனால் அவர் அவர் விரும்பும் பொருளுக்கு அவர் அவரே பணத்தை செலுத்த வேண்டும் .

நம்ம இலங்கையை போல, கும்பலில் கோவிந்தாவாக ஒருவரின் பணப்பையை காலி பண்ணுவது இல்லை .

கூட வந்த நண்பர்களுக்கும் அவர்கள் செலவு செய்ய மாட்டார்கள் .இதுவே வெள்ளையர்கள் பண்பாட்டு சிறப்பு

இந்த நடைமுறை என்று இலங்கையில் கால் பதிகிறதோ அன்று தான் இலங்கை இவர்கள் போல பொருளாதாரத்தில் முன்னோக்கி நகரும் ,

அது அல்லாது விடின் ஒருவன் சாக வேண்டியது ,மற்றவர்கள் அவன் காசில் வாழ வேண்டியது

.பொறுப்புணர்வு அற்ற சோம்பேறி சமுதாயமாக நமது பிள்ளைகள் ,உறவுகள் வாழ்ந்திட இதுவே காரணமாகிறது .

மேற்குலகை பார்த்து அவர்களிடமும் உள்ள நல்லவற்றை கற்போம் ,வாழ்வில் சிறப்போம் ,யாவும் ஒரு கல்வி தான் ,video

  • வன்னி மைந்தன்