நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் – கெஜ்ரிவால்

Spread the love

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் – கெஜ்ரிவால்

1நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

2நிர்பயா குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் – கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில்

போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை டெல்லி அரசு, டெல்லி துணை நிலை ஆளுநர், உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது.

அதைத்தொடர்ந்து, முகேஷ் சிங் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்து

உத்தரவிட்டார். இதன்மூலம் முகேஷ் சிங்கை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது.

இதற்கிடையே, நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் ஏற்படும் தாமதத்திற்கு ஆம் ஆத்மி அரசின் அலட்சியமே

காரணம் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் 1தூக்கிலிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி அரசின் கீழ் இருந்த அனைத்து வேலைகளும் சில மணிநேரத்தில் முடிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான எந்தவேலையையும் நாங்கள் ஒருபோதும் தாமதப்படுத்தவில்லை. டெல்லி அரசுக்கு இதில்

எந்த பங்கும் இல்லை. நிர்பயா குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்தார்


Spread the love