திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்


திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்

சேலம் மாவட்டம் மேட்டூரில் திருமண விழாவிற்கு வித்தியாசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி

மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்


திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்
மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹெலன் சிந்தியாவுக்கும்,

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30-ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

இதற்காக மணமகனின் உறவினர்கள் திருமண விழாவிற்காக வித்தியசமான பேனர் ஒன்றை

வைத்துள்ளனர். அதில் திருமண விழாவிற்கு பதில் வாலிபர் கைது என்றும், குற்றம் பெண்ணின் மனதை திருடியது

என்றும், தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்றும் இடம் பெற்றிருந்தது.

திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியசமான பேனர்

இதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.