தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Spread the love

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நிலத்தில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தரையில் அமர்ந்து சாப்பிடுவது, சாதாரண விஷயமாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இரண்டு கால்களையும் மடக்கி, தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் எத்தகைய பலன்களை பெற முடியும் என்று இங்கே காணலாம்:

1) வழக்கமாக தரையில் அமரும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது ‘சுகாசனம்’ எனப்படும் யோகப் பயிற்சியாகும். இந்த நிலை செரிமானத்திற்கு

உதவுகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம். உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.

2) தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. டேபிளில் அமர்வதை விட, தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு (மூளைக்கு தகவல்

அனுப்பும் நரம்பு) சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவலை மூளைக்கு அனுப்புகிறது. அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

3) தரையில் அமர்வது இன்னொரு ஆசனமான பத்மாசனத்துடன் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் விரிவடைந்து

உடம்பில் உள்ள வலிகளை குறைக்கிறது. தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் பொழுது உடல் தசைகள் நன்றாக செயல்பட்டு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது.

4) அமைதியான மனநிலையும், செய்யும் காரியத்தில் கவனத்தைச் செலுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உணவின் சுவை, நறுமணம் முதலிய அனைத்தையும் கவனிக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

5) பரபரப்பான வாழ்க்கை முறையில் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது சாப்பிடும்போது மட்டும்தான். குடும்பத்துடன் ஒன்றாக தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்பட்டு உறவை மேம்படுத்த முடியும்.

6) ஆரோக்கியமான வாழ்விற்கு தோரணை மிகவும் முக்கியமானதாகும். தரையில் அமரும்போது நமது முதுகுத்தண்டு நேராக இருந்து கம்பீரமான தோரணையை

ஏற்படுத்துகிறது. இதனால் தோள் பட்டையில் உள்ள வலிகள் குறைந்து, தசைகள் வலுவடைவதற்கு உந்து சக்தியாகவும், நரம்பு மண்டலத்தை சீரமைக்கவும் உதவுகிறது.

7) தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆகவே, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும்.

8) தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும், இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது. மேல்வாதம் மற்றும் கீழ்வாதம்

முதலியவற்றை தடுக்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் இது மூட்டுகளை எளிதாக இயங்கச் செய்கிறது.


தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே.

    Leave a Reply