சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்

Spread the love

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்

சீனாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் 2-ம் கட்ட பரவலை எட்டிய கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
பிஜீங்:

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக

உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.

எனவே இந்த ஆட்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன.

இதில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.

இதில் சீனா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்றவை தயாரித்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட

சோதனையை எட்டி உள்ளன. பிரேசில் போன்ற அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இந்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 69 லட்சத்து , 22 ஆயிரத்து, 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 64 ஆயிரத்து 172 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 4 லட்சத்து 85 ஆயிரத்து 634 பேர் மீண்டுள்ளனர்.

இதனிடையே சீனாவில் உருவான கொரோனா வைரஸ் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின்

என்ற பகுதியில் ஜூன் மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஓர் இறைச்சி

சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக பெய்ஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டப் பரவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் மெல்லத் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் சுகாதார அமைப்பு கூறியதாவது:-

சீனாவில் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று

உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இதில் 89 பேருக்கு உள்ளூரிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சின்ஜியாங் மாகாணத்தைச் சேந்தவர்கள். உரும்கி நகரில் தொற்று

உறுதிப்படுத்தப்பட்ட 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் 2-வது கட்டத்தை அடைந்துள்ளது அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தலியன், உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

      Author: நலன் விரும்பி

      Leave a Reply