சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

Spread the love

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து

எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்.

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்


மனித உடல் உறுப்புகள் அனைத்துமே மிக முக்கியமானவை. அதில் சிறுநீரகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.


சிறுநீரகங்கள் வயிற்று பின்புறம் முதுகெலும்பின் இரு பக்கங்களிலும் 2 செ.மீ. நீளத்தில் 6 செ.மீ அகலத்தில் 3 செ.மீ. தடிமானத்தில் இருக்கின்றன.

சிறுநீரகத்தின் வேலை: ஒரு மில்லியன் சிறுநீரக முடிச்சுகள் (நெப்ரான்கள்) நமது உடலில் உள்ளன. இந்த நெப்ரான்கள்

இரத்தத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீர்ப்பைக்கு அனுப்பிக் கொண்டேயிருப்பது தான் இதன் வேலையாகும்.

பொதுவாக நாளை நாம் என்ன வேலை செய்யப் போகின்றோம் என்று திட்டமிட்டு அதன்படி செயல்படுவது வழக்கம். நாளை நமது

வேலை என்ன என்று குத்துமதிப்பாக நமக்கு தெரியும். ஆனால் சிறுநீரகத்திலுள்ள நெப்ரான்களுக்கு அன்று என்ன வேலை

வரப்போகின்றது என்று கூடத்தெரியாது. நாம் எப்படி சாப்பிடுகின்றோம்! அப்பா கேட்கவே வேண்டாம். காலை டிபன்

வயிறு முழுக்க, அது ஜீரணமாகுமுன் ஸநாக்ஸ் வேறு பின் மதியம் பின் நொறுக்குத் தீனி, மாலை வடை, பஜ்ஜி, டீ, இரவு முழுக்க கட்டு

கட்டி விடுகின்றோம். இவ்வாறு அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடுவதால் அதிக கழிவுகள் சேர்கின்றன. அவற்றை வெளியேற்ற நெப்ரான்கள் ஓவர் டைம் வேலை பார்க்கின்றது.

தாயின் வயிற்றில் கரு உண்டான மூன்றாவது மாதத்திலிருந்து அந்த மனிதன் வளர்ந்து சாகும் வரை நம் உடலில் ஓய்வின்றி வேலை

பார்ப்பது சிறுநீரகம். இந்த ஆரம்பநிலை சிறுநீர் நெப்ரான்களின் வழியே பொட்டாசியம், பாஸ்பேட், அமோனியா போன்ற தாதுப்

பொருட்கள் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப் பையில் சேருகின்றன. இப்படிபட்ட சிறுநீரகம் செயல் இழதால் உடலில் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும்.

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

  • அடிக்கடி காய்ச்சல் வரும்.
  • கை, கால் வீக்கம் ஏற்படும்.
  • பசியின்மை, வயிறு உப்புசம்
  • இருமல், சளி, மூச்சுத்திணறல்
  • தோல் வியாதி
  • வயிற்றுப் போக்கு
  • மன சோர்வு
  • பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாற்றங்கள்
  • தசைப் பிடிப்பு
  • இரத்த சோகை

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் இருந்தால், சிறுநீரகம் ஒழுங்காக இயங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக செயலிழப்பிற்கு முக்கிய காரணங்கள்

  • அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால்
  • சிகரெட், பீடி, மது பழக்கத்தால், தவறான உணவு முறை,
  • பசித்தால் மட்டும் புசிக்காமல் ருசிக்காக நேரம் தவறி உணவு உட்கொள்வதால்
  • உயர்ந்த இரத்த அழுத்தம்
  • மன உளைச்சல், மன அழுத்தம், கோபம்
  • அளவுக்கு அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்

நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து

எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்..

      Leave a Reply