சித்த மருத்துவம் விழிப்புணர்வு

Spread the love

சித்த மருத்துவம் வெறும் மூலிகை மருத்துவமல்ல. மக்களிடையே சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இம்மருத்துவ முறையை தொடர்ந்து

பின்பற்றச் செய்வதும்தான் சித்த மருத்துவமாகும் என்று கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள

ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் கூறினார்.

அகத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு இலங்கையில் நேற்று (13)

திருகோணமலை மாவட்ட மூதூர் கங்குவேலி பிரதேசத்தில் அகஸ்தியர் வழிபட்ட சிவன் கோவிலில் மத வழிபாட்டுடன் இடம்பெற்றது.

இதனை கிழக்கு மாகாண சுதேச திணைக்களம், கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவு, கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியன

இணைந்து இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடமாடும் இலவச சித்த மருத்துவ முகாம், சித்தர் யாகம் மற்றும் அன்னதான நிகழ்வுகளையும் நடாத்தி வைத்தது.

சித்த மருத்துவம் விழிப்புணர்வு

இத்தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

மனித இனம் பெற்ற அறிவுத்திறனில் முக்கியமானது மருத்துவ அறிவாகும். பிற அறிவுகள் யாவும் மனிதனைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி ஆராய்ந்து பெற்றவையாகும்.

மருத்துவ அறிவானது மனிதன் தன்னைப்பற்றி ஆராய்ந்து கண்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகிலுள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. தமிழர்களுக்கான தனித்துவமிக்க, சிறப்புமிக்க மருத்துவ முறைதான் சித்த

மருத்துவமாகும். சமூகத்தில் சித்த மருத்துவத்தை ஒரு மூலிகை மருத்துவமாக எடுத்துச் செல்வதைக்காட்டிலும்,

வாழ்வியல் முறைகளைக் கூறும் மருத்துவமாக எடுத்துச் செல்வதுதான் சிறப்பானதாகும்.

ஒரு துறை வளர வேண்டுமானால் அத்துறையைச் சார்ந்த கல்வியாளர்கள், தொழில்முனைவோர், அத்துறையில் ஆராய்ச்சி செய்வோர் ஆகியோர் ஓரிடத்தில் கூடிக்

சித்த மருத்துவம் விழிப்புணர்வு

கலந்துரையாடுவது அவசியமாகும். அவ்வாறு கலந்துரையாடுவதன் மூலம் அத்துறையின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும், சமூகத்தில் அத்துறையை எளிதில்கொண்டு

சேர்க்கவும் இவ்வாறான செயற்பாடுகள் பாரிய முன்னெற்றத்தைக் கொண்டுவர வழி வகுக்கும் என்றும் அவர் கூட்டிக்காட்டினார்.

சித்த மருத்துவ மாணவர்கள், சித்த மருத்துவத்தை மட்டுமே பயிலாது, சித்த மருத்துவம் சார்ந்த பிற துறை அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள், படிக்கும்

காலத்திலிருந்தே சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தங்களைத்

தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே, பிற்காலத்தில் பெரிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

சித்த மருத்துவம் விழிப்புணர்வு
சித்த மருத்துவம்  விழிப்புணர்வு

Leave a Reply