சர்வதேச நீதிமன்றில் டிரம்ப் – வழக்கு தொடுக்கும் ஈரான்


சர்வதேச நீதிமன்றில் டிரம்ப் – வழக்கு தொடுக்கும் ஈரான்

ஈரான் இராணுவ தளபதியை ஈராக் தலைநகர் அருகில் வைத்து அமெரிக்கா படுகொலை புரிந்தது .

இந்த படுகொலை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது ,அது தவிர அவரை கொன்று விட்டு நாம் பயங்கரவாதியை கொன்று விட்டோம் என அமெரிக்கா பிரகடனம் செய்தது .

இந்த நிலையில் தற்பொழுது அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றில் இந்த

படுகொலை தொடர்பான வழக்கை ஈரான் தாக்கல் செய்கிறது .

இந்த படுகொலை உண்மையின் பக்கம் நீதியான முறையில் நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் விசாரித்து தண்டனை

வழங்குமாயின் அது வரலாற்றில் முக்கிய நிகழ்வாக மாற்றம் பெறும்

ஒரு கொலையின் ஊடாக அமெரிக்கா ஜனாதிபதி தனது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்


மேலும் நாடுகளுக்கு இடையிலான முறுகல் ,போர் நிலைகளுக்கு இவரே காரணமாக மாற்றம் பெற்றுவிட்டார் .

ஒரு நாட்டினது இராணுவ தளபதியை கொன்று விட்டு அவரை எவ்வாறு பயங்கரவாதி என குறிப்பிட முடியும் என ஈரான் கேள்வி கேட்டுள்ளது .

சுலைமானியின் படுகொலைக்கு நீதியின் மூலம் அமெரிக்கா அதிபர் டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .

எதிர்வரும் சிலவாரங்களில் இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றில் தாக்கல் செய்யப் படும் என அறிவித்துள்ளது .

ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,மேலும் ஈரான் இந்த வழக்கை

தொடர்ந்தால் அமெரிக்கா,பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

சர்வதேச நீதிமன்றில் டிரம்ப்
சர்வதேச நீதிமன்றில் டிரம்ப்