சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

Spread the love

சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

மேற்குவங்காளத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்களை தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
கோப்பு படம்
கொல்கத்தா:

மேற்குவங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நிம்டா பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கும் இடம் இயக்கிவருவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிம்டா நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் அம்மாநில சிஐடி போலீசார் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையில் அந்நகரின் ஸ்ரீதுர்கபள்ளி என்ற பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட

ஆயுதங்கள் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள், நாட்டு வெடிபொருட்கள் என பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.


Spread the love