யாழில் சக்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இதனை SHARE பண்ணுங்க

யாழில் சக்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து

வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலைய பொறுப்பு அதிகாரி வைத்தியர் அரவிந்தன் தெரிவித்தார்.

நேற்றைய (15) தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாமினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

குறிப்பாக இளம் வயதினருக்கு இந்த நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுகின்றது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள்

அதிகம் காணப்படுகின்றன. இளம் வயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்இ அல்லது தகுந்த வேளையில் நீரிழிவு

பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோய் குறித்த அறிகுறியை

அடையாளமகாணும் பட்சத்தில் அந்த நோயை குணப்படுத்த முடியும்.

இதேவேளை உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நீரிழிவு கழகம் யாழ் போதனா

வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் நேற்று காலை

ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply