கோபம் தவிர்

Spread the love

கோபம் தவிர்

என்னை அடித்தாயா – நீ
என்னை அடித்தாயா
எரிமலை ஒண்ணை – நீ
ஏறி அணைத்தாயா ..?

உச்சி வெயில் போல – என்
உள்ளம் எரியுதே
கந்தல் உடல் தேயுதே – உன்
கதை கேட்டு விழி உருகுதே

எத்தனை முறை என்னை இழிப்பாய்
எனக்கு பதில் சொல்லாய்
தோற்று போனது நீயே – இந்த
தோல்வி எல்லாம் போலியே

உள்ளம் மாசடைந்தால்
உயிரும் வாழ்ந்திடுமா
கள்ளம் மனம் படுத்தால்
கருணை பிறந்திடுமா

ஏதும் செய்தும் இன்றென்ன
எல்லாம் வீண் தானே
என்னை வீழ்த்த முடியாது
ஏற்று தெளிந்தாயே

கோபம் தவிர்த்தால் வாழ்வாயே
கொடி நாட்டி ஆள்வாயே
கொள்கை நட்டு எழுந்தால்
கோட்டை ஆள்வாயே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-07-2022

    Leave a Reply