கொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்

Spread the love

கொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்

கொழும்பு- பதுளைக்கு இடையிலான NB-9017 என்ற இலக்க பஸ்ஸில் பயணித்தவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளை சந்திக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா

தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர் NB-9017 என்ற பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹாலி-எலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து தலங்கம பஸ் டிப்போவுக்குச் சொந்தமான NB-9017 என்ற பஸ்ஸில் 23ஆம் திகதி

ஹாலிஎல நகருக்குச் சென்றுள்ள குறித்த நபர், அங்கு மதுபான கடையொன்றுக்குச் சென்று, மதுபானங்களை கொள்வனவு

செய்துள்ளதுடன், ஹாலிஎலயிலிருந்து மற்றுமொறு பஸ் வண்டியில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இவர் ஹாலிஎலைக்கு பயணித்த பஸ் நேற்று முன்தினம் (23) பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த போது, அது பலாங்கொட

பிர​தேசத்தில் இடைநிறுத்தப்பட்டு, அதன் நடத்துனர், சாரதி, அதில் பயணித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொற்றாளர் ஹாலி-எல ரொசட் தோட்டத்தில் ஒளிந்திருந்த போது, சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவருடன் தொடர்பிலிருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென ஹாலி- எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply