கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசே‌ஷ பாதுகாப்பு


கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசே‌ஷ பாதுகாப்பு

பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது

. இதனால் அவரது வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசே‌ஷ பாதுகாப்பு
நடிகர் ரஜினிகாந்த்
சென்னை:

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது குறித்த சி.டி.

ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மற்றும்

விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த மாவட்ட கமி‌ஷனர் மற்றும் காவல்துறை

கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு,

அவருடைய வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளித்துள்ளது.

ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறையும் அளித்துள்ளது.

ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது video