கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்” – மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்

Spread the love

கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்” – மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்திய மகிழ்ச்சியில் மருத்துவ உதவியாளர்கள் 2 பேர் நடனம் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

“கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்” – மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்
மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்
பீஜிங்:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 2760 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு இதுவரை நிரந்தர மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில், ஆரம்ப கட்டத்திலேயே நோயை

கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் அதை குணப்படுத்தலாம் என்ற நிலை மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்திய மகிழ்ச்சியில் மருத்துவ உதவியாளர்கள்

2 பேர் நடனம் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘இதயத்தை உருக வைக்கும் வீடியோ’, ‘இவர்கள் நிஜ ஹீரோக்கள்’

போன்ற தலைப்புகளுடன் பலரும் அந்த நடன வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ கொரோனாவை எதிர்த்து போராடி வரும் சக மருத்துவ

ஊழியர்களுக்கு ஊக்கத்தையும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் அளிப்பதாக இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்

கொரோனாவிடம் இருந்து

Spread the love