கெஜ்ரிவாலை பாராட்டியதால் காங்கிரஸ் தலைவர்கள் டுவிட்டரில் மோதல்

Spread the love

கெஜ்ரிவாலை பாராட்டியதால் காங்கிரஸ் தலைவர்கள் டுவிட்டரில் மோதல்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற கெஜ்ரிவாலை பாராட்டியதால் டெல்லி காங்கிரசின் முன்னாள் தலைவர்

அஜய் மக்கான், மிலிந்த் தியோராவுக்கு இடையே டுவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது.

கெஜ்ரிவாலை பாராட்டியதால் காங்கிரஸ் தலைவர்கள் டுவிட்டரில் மோதல்
காங்கிரஸ்

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். இந்த நிலையில், காங்கிரசை சேர்ந்த முன்னாள்

மத்திய மந்திரி மிலிந்த் தியோரா தனது டுவிட்டர் பக்கத்தில், கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அதன்

வருவாயை ரூ.60 ஆயிரம் கோடியாக இரட்டிப்பாக்கியது. கடந்த 5 ஆண்டுகளில் உபரி வருவாயை பராமரித்துள்ளது என்று பாராட்டி கருத்து பதிவிட்டார்.

அவரது இந்த கருத்தால் கோபம் அடைந்த டெல்லி காங்கிரசின் முன்னாள் தலைவர் அஜய் மக்கான் டுவிட்டரில் மிலிந்த் தியோராவுக்கு பதிலடி கொடுத்தார்.

அதில், சகோதரரே நீங்கள் காங்கிரசில் இருந்து வெளியேற விரும்புகிறீர்கள். முதலில் அதை செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மிலிந்த் தியோரா, டெல்லி முதல்-மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தின் செயல்திறனை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன். அவரின்

சாதனைகளை முன்னிலைப்படுத்தியிருந்தால், காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்திருக்கும் என கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டியது தொடர்பாக டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர்கள் மோதிக் கொண்டது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love