குவைத்தில் இருந்து 46 வீட்டுப் பணிபெண்கள் நாடு திரும்பினர்

Spread the love

குவைத்தில் இருந்து 46 வீட்டுப் பணிபெண்கள் நாடு திரும்பினர்

குவைட் நாட்டிற்கு வீட்டுப்பணிப் பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 இலங்கைப்

பணிப்பெண்கள் இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.

இவர்களில் அதிகமானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தான் பணிபுரிந்த வீடுகளின் எஜமான்களால் இடம்பெற்ற துன்புறுத்தல்கள், இன்னல்களை தொடர்ந்தும்

பொறுத்துக் கொள்ள முடியாமல் குறித்த வீடுகளில் இருந்து தப்பிச் சென்ற போது அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்களில் 13 பேர் அந்நாட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும்

ஏனைய 33 பேரும் குவைட்டிற்கான இலங்கை தூதரகத்தின் “சுரக்ஷா” தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து

வைக்கப்பட்டிருந்த நிலையிலும், தற்காலிக கடவுச்சீட்டின் கீழ் இந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை 6.20 மணியளவில் குவைட்டில் இருந்து வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான

யூ.எல்.230 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.

குவைத்தில் இருந்து

Leave a Reply