குற்றச்செயல் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்

Spread the love

குற்றச்செயல் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்

குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 2

வார காலப்பகுதியில் 1527 க்கும் 1263 க்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும் என்று

பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகருமாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 1997

என்ற தெலைபேசி இலக்கத்துக்கு பாரிய அளவிலான திட்டமிட்ட ஊழல் குற்றச்செயல் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் கப்பம்

பெறுதல் போன்ற தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய

செயற்பாடுகள் குறித்தும் தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

இதேவேளை அங்கொட லொக்கா உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான

மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான அங்கொட லொக்கா என

சந்தேகிக்கப்படுபவரின் மரணம் உடலில் விஷம் பரவியதால் ஏற்பட்டிருக்கக் கூடும் என தமிழக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது

      Leave a Reply