காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்

Spread the love

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்

மாரடைப்பு, பக்கவாத நோய் தாக்குதல் போன்றவற்றுக்கு காற்று மாசு முக்கிய காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய் ஏற்படும்
மாரடைப்பு
லண்டன்:

போகி பண்டிகையான இன்று பழைய பொருட்களை எரித்ததால் காற்றில் அதிக அளவில் மாசு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வாகன புகை, தொழிற்சாலை நச்சுக்கள் போன்றவை காற்றில் கலப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

இது, மனிதனுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குவதுடன் சுற்றுப்புற சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் காற்று மாசுவினால் நச்சு உருவாகி அது மனிதனுக்கு உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

அதாவது, மாரடைப்பு, பக்கவாத நோய் தாக்குதல் போன்றவற்றுக்கும் காற்று மாசு முக்கிய காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்

இங்கிலாந்தில் உள்ள ஹார்ட் பவுண்டேசன் நடத்திய ஆய்வில் இங்கிலாந்து நாட்டில் காற்று மாசு காரணமாக

ஒவ்வொரு நாளும் 40 பேர் வரை மாரடைப்பு மற்றும் அது தொடர்பான நோய்களால் உயிர் இழப்பதாக தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தற்போது 11 ஆயிரம் பேர் காற்றுமாசுவினால் உயிர் இழக்கின்றனர். இந்த காற்று மாசு

இன்னும் அதிகரித்து அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை இங்கிலாந்தில் உயிர் இழப்பார்கள் என்று கூறி உள்ளனர்.

காற்றுமாசுவினால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு இந்த உயிர் பலியை ஏற்படுத்தும் என்றும் கூறி உள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் காற்றில் எந்த அளவுக்கு அதிகபட்சமாக நச்சு துகள்கள் இருக்கலாம் என்று

குறிப்பிட்டு இருக்கிறதோ அதைவிட மிக அதிகமாக இங்கிலாந்தில் காற்று மாசு இருக்கிறது.

இதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஆய்வு குழுவினர் கூறி இருக்கிறார்கள்.

மேலும் உலக சுகாதார நிறுவனம் காற்று மாசு வரையறை தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள்.

Author: நலன் விரும்பி

Leave a Reply