கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்


கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் அதிக வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்
விக்ரம்


நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது

விக்ரம், ‘கோப்ரா’ படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை

இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் பிப்ரவரி 14-ந் தேதியான காதலர்

தினத்தன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரம்

ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கமல் சிவாஜியை மிஞ்சிய