கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு


கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு

அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு


குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வுசெய்த போலீசார்
கவுகாத்தி:

நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை

முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் இன்று காலை

திடீரென குண்டுவெடிப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் திப்ரூகார் நகரில் கிரகாம் பஜார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 37 அருகே இன்று

காலை திடீரென கடை ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இதேபோல், அப்பகுதியில் உள்ள குருத்வாரா அருகிலும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

தகவலறிந்து போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் ஏற்பட்டுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடைகள் அருகே திடீர்
கடைகள் அருகே திடீர்