
என்னை அழைப்பாயா
கொண்டையில மல்லிகை பூ
கொலிசாட்டம் ஆடுதடி
தண்டவாள ரயில் போல
தாவணியோ ஓடுதடி
கண்டாவளை சந்தையில
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
இரணைமடு அருவி போல
இதயத்துள் ஓடுறியே
பரந்தன் வீதியில
பாவை நீ போகையில
பார்க்காமல் இருப்பேனோ
பாவி நான் துடிக்கேனோ
உன்னை தொடர்ந்திடவா
உள்ளத்திலே இருந்திடவா
என்னை நீ எண்ணாம
எக்காலம் இருப்பாயோ
ஒத்தையில நீ இருந்து
ஓரமா அழுகிறியோ
வித்தைகளை நான் காட்ட
வித்தகனை அழைக்காயோ .!
ஆக்கம் 21-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )