
என்னை அழைக்காயா
கன்னத்தில் கை வைத்து
காதோரம் நிற்பவளே
கண்ணாடி சீண்டுதடி
காதலதை தூண்டுதடி
முன்னாடி உனை பார்க்க
முத்தமிட தூண்டுதடி
மூவேளை உனை தானே
முழு நாளும் நினைக்குதடி
கன்னக் குழி சிரிப்பழகில்
கதை சொல்லி நிற்பவளே
எண்ணத்தை தூண்டிடவே
எடுத்து கதை சொல்லிடடி
உன்னோடு நான் வாழும்
உயர்வான நாளதனை
என்று நீ சொல்வாயோ
ஏக்கத்தில் தவிக்கின்றேன்
வாலாட்டும் நாய்போல
வாசலில நான் நிற்க
வாய் பேசா நிற்கிறியே
வாவென்று அழைக்காயோ ..?
ஆக்கம் 14-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )