உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணம் – போதிய சாட்சியங்கள் இல்லை

Spread the love

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணம் – போதிய சாட்சியங்கள் இல்லை

2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம்

இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட விஷேட பொலிஸ் விசாரணைப் பிரிவில்

நடைபெற்று வந்த விசாரணைகள் போதிய சாட்சியங்கள் இல்லாதினால் பூர்த்தியடைந்துள்ளன.

இதுதொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் அரவிந்தடி சில்வாவிடமும்

உலகக்கிண்ண போட்டியின் அப்போதைய அணித் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்காரவிடமும் பெறப்பட்ட

வாக்குமூலங்களின் பிரகாரம் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இவ் விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நேற்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.

இப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே,முன்னாள் தெரிவுக்குழு த அரவிந்த டி சில்வா மற்றும் குமார்


சங்கக்கார ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

      Author: நலன் விரும்பி

      Leave a Reply