உருளைக்கிழங்கு சீஸ் போண்டா,


உருளைக்கிழங்கு சீஸ் போண்டா

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட உருளைக்கிழங்கு, தயிர், சீஸ் சேர்த்து செய்யும் போண்டா அருமையாக இருக்கும். இன்று

இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா
உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்),

துருவிய சீஸ் – ஒரு கப்,
சோள மாவு (கார்ன்ஃப்ளார்) – ஒரு டேபிள்ஸ்பூன்,
மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,


இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கெட்டித்தயிர் – அரை கப்,


சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
ஆய்ந்த செலரி கீரை- ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா

செய்முறை:

சோள மாவுடன், மைதா மாவு, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும்.

வேக வைத்த உருளைக்கிழங்குடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளைக் கரைத்து வைத்த மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தயிருடன் சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதில் பொரித்த சீஸ் போண்டாக்களைப் போட்டு, மேலே செலரி கீரை தூவிப் பரிமாறவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா ரெடி.

உருளைக்கிழங்கு சீஸ்
உருளைக்கிழங்கு சீஸ்