உயிரோடு பெண் எரித்துக்கொலை


உயிரோடு பெண் எரித்துக்கொலை


உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் பெண் ஒருவரை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உயிரோடு பெண் எரித்துக்கொலை
கோப்புப்படம்
பிஜோனூர்:

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

அங்குள்ள ஆழ்துளை கிணறு அருகே அந்த பெண்ணின் பிணம் கிடந்தது. கட்டிலில் கட்டப்பட்டு எரிந்த நிலையில் அந்த பிணம் கிடந்தது.

யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உயிரோடு பெண் எரித்துக்கொலை

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அவரை சுட்டுக்கொன்று எரித்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

என்றும் தெரியவில்லை. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

உயர் போலீஸ் அதிகாரி லட்சுமி நிவாஸ் மிஸ்ரா கூறும் போது, “அந்த பெண்ணின் அடையாளத்தை அறிய டி.என்.ஏ. மாதிரிகளை நாங்கள் சேகரித்து வருகிறோம்” என்றார்.

அந்த பெண்ணை அடையாளம் கண்ட பிறகுதான் எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவரும். அதற்கு பிறகுதான் இந்த வழக்கில் கைது நடவடிக்கை இருக்கும்.

இளம்பெண் கட்டிலில் கட்டி உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறான காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறுவதே இந்த தொடர் கொலைகளுக்கு காரணம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

இதேபோல உத்தரபிரதேச மாநிலம் பக்ராரிச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மற்றொரு பெண் கொல்லப்பட்டார்.

அவரது உடல் மற்றும் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு இருந்தது. அடையாளம் தெரியாத நிலையில் அவரது பிணம் கிடந்தது.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என பெண்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர் .