உதடு வெடிப்பதை தடுக்க இதை பண்ணுங்க

Spread the love

உதடு வெடிப்பதை தடுக்க இதை பண்ணுங்க

உதடுகள் வேகமாக வறட்சி அடைவதை தவிர்க்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். அதனை வீட்டிலேயே தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

உதடு வறட்சி அடைவதை தடுக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?
உதடு வறட்சி அடைவதை தடுக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?


அலுவலகத்திலோ, வீட்டிலோ குளிர்சாதன வசதி கொண்ட அறையில் அமர்ந்திருந்தாலும் கூட உதடுகளில் வறட்சி நிலவக்கூடும். ஏனெனில் குளிர்சாதன பெட்டிகளில் இருந்து

வெளியேறும் காற்றில் குளிர்ச்சி நிலவினாலும் அது சருமத்தை உலரும் தன்மைக்குத்தான் மாற்றக்கூடும். உதடுகள் வேகமாக

வறட்சி அடைவதை உணரமுடியும். அதை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். அதனை வீட்டிலேயே தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

ஒரு டேபிள்ஸ்பூன் வாஸ்லைனை மைக்ரோ ஓவனில் வைத்து உருகவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனை குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.

தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையை சேர்த்தும் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு

உதடு வெடிப்பதை தடுக்க இதை பண்ணுங்க

கலந்து கொள்ளவும். அதனை மைக்ரோ ஓவனில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனை சிறிய பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.

வாணலியில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக

கிளறவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகை வாணலியில் உருக்கி அதனுடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இந்த

கலவையில் லாவண்டர் எண்ணெய் 10 சொட்டுகள் ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்தும் உதட்டுக்கு உபயோகிக்கலாம்.

மேலே கூறியவற்றை பின் தொடருங்கள் வாழ்வு வளமாகவும் என்பதை இதனூடாக கண்டு மகிழ்ந்திருப்பீர்கள் .

    Leave a Reply