உடலில் 400 இடங்களில் கத்தியால் குத்தி உளவுத்துறை அதிகாரியை கொடூரமாக கொன்ற கும்பல்


உடலில் 400 இடங்களில் கத்தியால் குத்தி உளவுத்துறை அதிகாரியை கொடூரமாக கொன்ற கும்பல்

டெல்லி வன்முறையின்போது கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

உடல் முழுவதும் 400 இடங்களில் கத்திக்குத்து… டெல்லி உளவுத்துறை அதிகாரியை கொடூரமாக கொன்ற கும்பல்


உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா
புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் தலைமைக் காவலர், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்ளிட்ட 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க காவல்துறையில் 2

சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள்

இருந்ததாக, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

உடல் முழுவதும் காயங்கள் இருந்தைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இப்படிப்பட்ட ஒரு கொடூரமான கொலையை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை எனவும் அவர்கள்

கூறியுள்ளனர். இதன்மூலம் அன்கிட் சர்மாவை வன்முறைக் கும்பல் நீண்ட நேரம் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி சந்த்பாக் பகுதியைச் சேர்ந்த அன்கிட் சர்மா, 2017ம் ஆண்டில் இருந்து உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். வன்முறை நடந்த செவ்வாய்க்கிழமை

மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அன்கிட் சர்மா, நிலைமையை அறிந்துகொள்வதற்காக மீண்டும் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சுற்றி

வளைத்து கடுமையாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொன்று உடலை கால்வாயில் போட்டுள்ளனர். மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது

உடலில் 400 இடங்களில்