இஸ்ரேல் உலங்கு வானூர்தி அவசர தரையிறக்கம் – தப்பிய இராணுவத்தினர்


இஸ்ரேல் உலங்கு வானூர்தி அவசர தரையிறக்கம் – தப்பிய இராணுவத்தினர்

இஸ்ரேலிய நாட்டின் தயாரிப்பில் உருவான தாக்குதல் உலங்கு வான் ஊர்தியும் ,சரக்கு வானூர்தியுமான யசூர் வகையான உலங்கு

வானூர்திகளுக்கு கடந்த ஆறு மாதத்தில் மூன்று தடவை இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது .

இவ்வாறு நேற்று முன்தினம் இந்த உலங்கு வானூர்தி ஒன்று அவசர தரை இறக்கத்திற்கு உள்ளாகியுள்ளது ,

தமது உலங்கு வானூர்தி தயாரிப்பு நிறுவனத்தில் இதன் சில உதிரி பாகங்களில் ஏற்படும் குறை பாடுகள் காரணமாக இந்த இயந்திர

கோளாறு அடிக்கடி ஏற்படுவதாக கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,அதனை சீர்

செய்யும் முகமாக புதிய வகையான உபகரணத்தை பொருத்தும் நடவடிக்கையில் பொறியியல் பிரிவு ஈடுபட்டுள்ளது

இவ்வாறு தொடர்ந்து இதேபோல இயந்திர கோளாறுகள் இடம் பெறும் எனின்

இந்த வான் ஊர்திகள் சேவையில் இருந்து முற்றாக விலக்க படும் அபாயம் எழுந்துள்ளது

அது தவிர இதே ராக உலங்கு வானூர்திகளை சர்வதேச சந்தையிலும் இஸ்ரேல் விற்பனை செய்துள்ளது ,அவ்வாறன உலங்கு

வானூர்திகளுக்கும் இவ்வாறு நேர்ந்தால், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டிய

தேவை இஸ்ரேல் ஆயுத தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்படும் என நம்ப படுகிறது

அதனால் அவசரமாக மீள் புனர் நிர்மாணம் செய்யும் நடவடிக்கையில் விமான தயாரிப்பு நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது ,

இந்த வகையான உலங்கு வானூர்திகளை செலுத்தும் விமானிகளும் கலக்கத்தில்

உள்ளனர் என்பது இதன் மூலம் தற்போது அம்பல பட்டுள்ளது,

கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இதே ரக வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது ,

எனினும் அந்த விபத்தில் இருந்து 16 இராணுவத்தினர் தப்பித்து கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது

மேலும் திகில் ஊட்டும் இராணுவ செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

இஸ்ரேல் உலங்கு வானூர்தி
இஸ்ரேல் உலங்கு வானூர்தி