இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி

Spread the love

இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி

இலங்கை ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது முப்பது வீதத்தினால் மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது .

மக்கள் வேலைவாய்ப்பு இழந்து சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வரும் நிலையில் ,குடி பிரியர்கள் குடிப்பதற்கு பணம் இன்றி தவிப்பதால இந்த மதுபான விற்பனையில் திடீரென பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .

மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .

மதுபான விற்பனை மூலாமே அரசு அதிகளவு வரி சம்பாதித்து வருகிறது .

இவ்வாறு அறவிடப்படும் வரி மூலமே நாட்டை நடத்தி வருகிறது பல நாடுகள் .

அவ்விதமான முக்கிய வருமானத்தை அதிகமாக பெற்று தரும் புகைத்தல் ,மற்றும் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது .

மீளவும் மதுபானத்தை குடி மகன்கள் குடித்திட இயல்பு நிலைக்கு நாடு திரும்பினால் மட்டுமே மதுபான விற்பனை மீள சூடு பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

எரிபொருள் விநியோகம் இயல்பு நிலைக்கு திருப்பினால் மூட பட்ட அல்லது முடங்கிய தொழில் துறைகளை மீள இயங்கும் நிலை ஏற்படும் .

அதன் பின்னர் வருமானத்தை அரசு மற்றும் மக்கள் பெற்று கொள்ளும் நிலை ஏற்படும் .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply