
அடுத்த 5ஆண்டுக்குள் உச்ச வெப்பம்
அடுத்த 5ஆண்டுக்குள் உச்ச வெப்பம் ,அடுத்துவரும் 5 ஆண்டுக்குள் உலக நாடுகளில் அதிக வெப்பம் உச்சம்பெறும் என வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளுக்கான வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளன.
உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு (WMO) மற்றும் இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி நிலையம் (UK Met Office) ஆகியவை 2025 முதல் 2029 வரை
உலகளாவிய மற்றும் பிராந்திய வானிலை நிலவரங்களைப் பற்றிய முக்கியமான முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில், வருடாந்திர வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 சதவீத வாய்ப்பு இருக்கிறது. மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச வெப்பநிலை வரம்பை மீண்டும் மீறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.
நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள், உலக வெப்பநிலை, மிகவும் ஆபத்தான 2 டிகிரி செல்சியசை எட்டும் வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய வெப்பநிலை உயர்வு
2025–2029 காலத்தில், உலக சராசரி வெப்பநிலை 1850–1900 காலத்தைவிட 1.2°C முதல் 1.9°C வரை அதிகமாக இருக்கும் என கணிப்பு.
குறைந்தபட்சம் ஒரு ஆண்டில் 1.5°C-ஐ தாண்டும் வாய்ப்பு 70% உள்ளது.
அர்க்டிக் பகுதியில் வெப்பநிலை உலக அளவைவிட மூன்று மடங்கு வேகமாக உயரும்.
சுமார் 2.4°C வரை அதிகரிக்கும் என WMO தெரிவிக்கிறது.
அதிக வெப்ப அலைகள், கனமழை, வறட்சி, கடல் மட்ட உயர்வு போன்றவை அதிகரிக்கும்.