
அகப்பட்டது 450 கிலோ போதை
அகப்பட்டது 450 கிலோ போதை ,450 கிலோ போதைப் பொருட்கள் அடங்கிய பொதிகளோடு பதினொரு பேர் அகப்பட்டனர்.
தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நேற்று (27) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து
450 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து நடத்திய இந்த சுற்றிளைப்பில் பதினொரு மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தேவேந்திர முனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீன்பிடி படகுகளும், போதைப்பொருளும்
பொறுப்பேற்கப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளும், போதைப்பொருளும் தற்போது திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவோம் எனக்கூறி வந்த அரசு, இலங்கையில் தலைவிரித்தாடும் இந்த போதையை எவ்வாறு கட்டுப்படுத்தப்போகின்றது.
இல்லை கண்டும் காணாமலும் விட்டுவிடப்போகின்றதா? போதைக் கலாச்சாரத்தால் மக்கள் சீரழிவது தெரியவில்லையா.
இலங்கையில் போதைப்பொருள் பாவனை இன்று பெரும் சமூக பிரச்சனையாக மாறியுள்ளது அரசுக்கு தெரியாதா?
மாணவர்களிடையே போதை பாவனை
பொதுவாக, இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே இந்தப் பாவனை அதிகரித்து வருவது கவலைக்கிடமான விடயமாகும்.
போதைப்பொருளின் அடிமையாவதன் மூலம் நபரின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறது. இது குடும்பங்களின் அழிவிற்கும், சமூக சீர்கேடுக்கும் வழிவகுக்கிறது.
குற்றச்செயல்கள், வன்முறை, கல்வி பாதிப்பு, வேலை இழப்பு போன்ற பலவகையான பிரச்சனைகள் இதன் விளைவாக உருவாகின்றன.
இந்த நிலையை தடுக்க, சமூக விழிப்புணர்வு, சிறப்பான கல்வி, கடுமையான சட்டங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்கள் போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு துறைகள் ஒன்றிணைந்து செயல்படுவது இப்போதை கலாச்சாரத்தை அடியோடு இல்லாதொழிக்க முடியாதாயினும் கட்டுப்படுத்தும் ஒரு வழியாகும்.