இலங்கையில் மக்கள்
அரசில்வாதிகளுக்கு பயம் இந் நிலை இருக்கும் வரை நாடு உறுப்படாது

வெள்ளையர்கள் முழக்கம் – photo

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் அசாதரண சூழ் நிலை காரணமாக சுற்றுலாதுறை வீழ்ச்சி கண்டுள்ளதையும் நாட்டின் வருமானதுறைக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் நாம் அறிகின்றோம் அதே போல் இலங்கைக்கு உல்லாச பயணிகளாக வருவதாக கூறி ஹோட்டல்களை பதிவு செய்தவர்கள் தங்களுது நிராகரிப்புகளை செய்து வருகின்றனர். இதனால் இத்துறையை நம்பி இருப்பவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். சுற்றுலாதுறையும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இலங்கையை பொறுத்தவரையில் இலங்கை;கான வருமானதுறையில் சுற்றுலாதுறை பெரும் செல்வாக்கை ஏற்படுத்தி வருகின்றது. நுவரெலியா உட்டபட மலையகத்தின் பெறும்பாலான ஹோட்டல்களின் வருமானம் சுற்றுலாதுறையே. இந்த மாதம் வருட இருதி மாதமாகும் இந்த காலப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் ஆனால் அது தற்போது பாரிய அளவில் வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. இதனால் ஹோட்டல்துறை மலையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு உல்லாச யணியாக இலங்கை வந்த குழு ஒன்றுறை புஸ்ஸல்லாவையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் போது அவர்களிடம் இலங்கையில் அரசியல் சூழ் நிலை அசாதாரண நிலையில் இருக்கும் போது உல்லாச பிரயாணிகளின் வருகை சற்று குறைவாக இருக்கும் நிலையில் தாங்கள் வந்து உள்ளீர்கள். உங்களுக்கு பிரச்சனை இல்லையா இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன என்று கேட்ட பொழுது. அவர்கள்
எல்லா நாடுகளிலும் பிரச்சனைகள் இருக்கதான் செய்கின்றன இலங்கையில் ஒன்றும் புதுமையானது அல்ல இதனை ஒரு பிடித்து வைத்துக் கொண்டு நமது நாளாந்த செயற்பாடுகளை மழுங்க அடிக்க கூடாது நாங்கள் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு உலாச பயணியாக வந்துள்ளோம் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இலங்கையில் அரசியல் குளருபடிகள் இருப்பதாக அறிகின்றோம் அதனாலும் எங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை நாங்கள் நாட்டை மகிவுடன் சுற்றி பார்த்து வருகிறோம். இருந்தும் இவ்வாறான பிரச்சனைகளினால் சில நாடுகளில் இருந்நு இந்த நாட்டுக்கு வருவதை உல்லாச பயணிகள் தவிர்த்து வருகின்றன என கூறுகின்றனர் ஜேர்மனிய நாட்டின் பிரஜைகள்

ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவை நோக்காக கொண்டு இலங்கை மலையகம் புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு வந்ததிருந்த ஜேர்மன் நாட்டு பிரஜையிடம் கேட்ப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இவ்வாறு தெறிவித்தனர்.

இவருடன் அந் நாட்டை சேர்ந்த குழு ஒன்றுறே வருகை தந்திருந்து. அவர்களும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். இலங்கையில் அரசியல் ஸ்தீரம் இன்iமால் உல்லாச பயணிகள் வருவது கூரைவு என்று கூறுகின்றார்கள் அவர்கள் சில நாடுகளை சேர்ந்தவர்களே நாங்கள் அப்படி அல்ல. வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சின்ன சின்ன பிரச்சனை என்றாலும் பயந்துக் கொண்டு வரமாட்டார்கள். நாங்கள் அப்படி அல்ல இலங்கைக்கு வந்துள்ளோம். தற்போது இந்த நாட்;டில் காணப்படும் அரசியல் பிரச்சனையானது இங்குள்ளவர்களுக்கு பாரிய பிரச்சனையாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் அல்ல. என்று கூறினார்கள். இருந்தும் இவர்களுக்கு பல விடயங்களை கூர மனம் இருந்தாலும் தாங்கள் சுற்றுலாவிற்கே இங்கு வந்துள்ளோம் அரசியல் சார்பான விடங்கள் தொடர்பில்; கருத்து தெரிவிக்க மாட்டோம் என கூறி விடைபெற்றுச் சென்றனர்.

இருந்தும் இவர்களின் கருத்துப்படி நாட்டுக்கு நாடு இவ்வாறு பிரச்சனைகள் இருக்கதான் செய்யும் இதனை தூக்கி பிடித்துக் கொண்டு மக்கள தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொள்ள கூடாது. நாட்டை நம்பி வீட்டை விட்டுவிடக் கூடாது. மக்கள் அனைவரும் சிந்தித்து செயற்பட்டால் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை மக்களே கட்டுபடுத்திக் கொள்ளலாம். ஆட்சிகள் மக்களுடையது. மக்கள் சொல்வதே அரசியல்வாதிகள் கேட்க வேண்டும். உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் அரசில்வாதிகள் மக்களுக்கு பயம். ஆனால் இங்கு மக்கள் அரசில்வாதிகளுக்கு பயந்து உள்ளனர். இந் நிலை இருக்கும் வரை இந்த நாடு உறுப்படாது. என்பதை சொல்லமல் சொல்லி சென்றனர்.

மேலும் 20 செய்திகள் கீழே