மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது விசாரணை, நாளை தீர்ப்பு -பதட்டத்தில் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 09 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலினூடாக கலைத்தமை சட்டத்துக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரோ உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

குறித்த மனுக்களின் இடை நிலை மனுதாரர்களின் வாதங்களும் அதன் பின்னர் மனுதாரர்களின் பதில் வாதங்களும் மன்றில் இன்றைய தினம் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 20 செய்திகள் கீழே