3½ லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் வழியாக ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சான் ரோரியன் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று வந்த கொள்ளையர்கள் சிலர், அந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே, அந்த எந்திரத்தை அலேக்காக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அந்த எந்திரத்தில் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 400 இருந்ததாக ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

போலீசார், ஏ.டி.எம். எந்திரத்துடன் தப்பி ஓடிய கொள்ளையர்களை கைது செய்யும் பணிகளை முடுக்கி விட்டு உள்ளன

மேலும் 20 செய்திகள் கீழே