நாட்டின் இரண்டாவது பலமிக்க நபர் சபாநாயகரே

நாட்டில் தற்போதுள்ள நீதிமன்ற உத்தரவுக்கமைய, நாட்டின் இரண்டாவது பலமிக்க நபர் தாங்களே என சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து சட்டரீதியாக நீக்கப்படவில்லை. அவ்வாறு நீக்கவும் முடியாது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்பட்டாலும் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்படவில்லை.எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான ஆசனத்தை வழங்க முடியமைக்கு என்ன காரணம் என்றும் சுஜீவ நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஸவால சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை அவ்வவ் பதவிகளிலிருந்து தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யுமாறும் உத்தரவிடுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த விடயம் குறித்து சட்டத்தில் என்ன உள்ளது என்பது குறித்து ஆராய்வதாகத் தெரிவித்தார்.

மேலும் 20 செய்திகள் கீழே