இலங்கை அரசியல் நிலை கவலையை அளிப்பதாக அமெரிக்க அதிரடி அறிவிப்பு -கலக்கத்தில் கொழும்பு

நாட்டின் நடப்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தனக்கு கவலையை அளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், வணிகரீதியாக உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் ஒரு மோசமான சமிக்ஞையை காட்டி நிற்பதாக இலங்கைக்கான அமெரிக்காவின் வர்த்தக சம்மேளனம் அறிக்கையொன்றின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமைகள் குறித்து அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் காத்திரமான முதலீட்டாளர்கள் தங்களின் கவலையை வௌிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நலன்களுக்காகவும், தேசிய நலன்களுக்காகவும் விரைவான தீர்வொன்றை காண்பதற்காகவும் பிரச்சினையுடன் தொடர்புபட்டுள்ள தரப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிப்பதோடு, அமெரிக்காவிற்கும் – இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் உதவியாக அமையும் என, இலங்கைக்கான அமெரிக்க வர்த்தக சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 20 செய்திகள் கீழே